தந்தை சிவபெருமான் அருளிய ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் ரகசியம்.!
யாதவகுல சூரசேனரின் மகன் வசுதேவர் மற்றும் தேவகியின் எட்டாவது குழந்தை
கம்சனை கொல்லும் என்று அசரீரீ ஒலித்தவுடன், வசுதேவரின் சத்தியத்தின்படி ஒவ்வொரு குழந்தையாக கம்சன் கொல்ல தேய்பிறை அஷ்டமியில் ரோகிணி நட்சத்திர நாளில் 8வது பிறந்த ஸ்ரீகிருஷ்ணர் தந்தை வசுதேவரால் யமுனை ஆற்றுக்கு அப்பால் உள்ள நந்தகோபர் மற்றும் யசோதையால் வளர்க்கப்பட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் வரலாறு தொடங்குகின்றது, சுமார் 16,000 மனைவிகளை கொண்டவராக சித்தரிக்கப்படும்
ஸ்ரீ கிருஷ்ணர் அஷ்டபார்யா என அழைக்கப்படும் ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி,நாக்னஜிதி,காளிந்தி,மித்ரவிந்தா,
பத்ரா,லஷ்மணா என்ற 8 மனைவியர்களை மட்டுமே உண்மையான மனைவியர்களாகவும் மற்றவர்கள் விதேஷி மனைவியர் என அழைக்கப்பட்டு நரகாசுரனை கொன்று சிறையிலடைக்கப்பட்ட 16,000ம் பெண்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தானே மணந்து மனைவியராக்கி அவர்களை அரண்மனையில் நிலை நிறுத்தியதாகவும் புராணங்கள் மூலம் அறியமுடிகின்றது. கிருஷ்ணரை பொறுத்த வரை கி.மு.3228இல் ஜூலை 19 ம் தேதி பிறந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள், மற்றும் பஞ்சாங்கத்தை வைத்து கணக்குசொல்பவர்கள் கணிக்கின்றனர், 122 வயது வரை வாழ்ந்து
தனது அவதாரத்தை நிறைவு செய்தார் என்றும் குறிப்பிடுவோரும் உண்டு. கிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன், அவரது மகன் அதாவது
ஸ்ரீ கிருஷ்ணரின் பேரன் அனிருத்தன் என்றும் அறிய முடிகின்றது, ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு இன்னொரு குழந்தை வேண்டி உபமன்யு முனிவரை நாட அவரின் உபதேசப்படி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு காட்சியளித்த சிவபெருமான் குழந்தை வரமருள அதற்க்கு சாம்பன் என பெயரிடப்பட்டு வளர்க்கபட்டதாகவும் அறியமுடிகின்றது.
ஒருநாள் சாம்பன் துவாரகைக்கு வந்த முனிவர்களிடம்
கர்ப்பிணி பெண் வேடமிட்டு தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என கேலி பேச...கோபமடைந்த முனிவர்கள் உனக்கு உலக்கை பிறக்கும் அது உங்கள் குலத்தை அழிக்கும் என சாபமிட்டனர் இப்படி புராணங்கள் பல விஷயங்களை கூறினாலும் உண்மை என்னவென்று நாம் சிறிது ஆராய்வோம்..,
கலியுக இறுதியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை படைக்க வரும் ஜோதியான பிறப்பு,
இறப்பிற்கு அப்பாற்பட்ட தந்தை சிவபெருமான் சத்யுகம் என்னும் புண்ணிய உலகில் சனாதன தர்மத்தை ஸ்தாபிக்கின்றார் அந்த தர்மத்தின்
ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சாவளிகள்
எட்டு பேர் வருகின்றனர்.
எப்படி முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் என்றெல்லாம் அழைக்கின்றோம். அதைப்போல முதலாம் கிருஷ்ணர் அவரது மகன் இரண்டாமவர் இப்படி எட்டு பேருக்கு எட்டு மனைவியர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் இதனாலேயே
அஷ்டபார்யா என்று அழைக்கப்பட்டு 8 மனைவியர்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமானவர்கள் என்று சொல்லி விட்டனர்.மற்றபடி 8 மனைவியர் என்று சொல்வது அவருக்கு இழைக்கப்பட்ட நிந்தனை,பரமாத்மா சிவன் இந்த அஷ்ட இரத்தின ஜோடிகளை கலியுக இறுதியில் உருவாக்கினார், இந்த உண்மை தெரியாத
காரணத்தால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு 8 மனைவியர் என்று சொல்லிவிட்டனர். அடுத்து தர்மத்தை படைக்க வந்த ஜோதியான தந்தை கொடுத்த ஞானத்தின் மூலம் ஈசனால் நரக அசுர குணங்களுக்கு முடிவு ஏற்பட்டது, இதுவே
நரகாசுரனின் அழிவு.இந்த ஈசனின் ஞானத்தை உலகம் முழுக்க கொண்டு செல்ல குடும்பத்தில் உள்ள கன்னியர்கள் தங்களின் வாழ்க்கையை ஜோதியான சிவ பரமாத்மாவிற்கு அர்ப்பணித்தனர்.
அவர்களின் வாழ்க்கைக்கு பரமாத்மாவே பொறுப்பேற்றார் இதுதான் சிவ பரமாத்மாவின் காரியம்.ஆனால், பரமாத்மா யார் என தெரியாத காரணத்தால் நரகாசுரனை அழித்து 16,000 பெண்களை மீட்டு ஸ்ரீ கிருஷ்ணர் ராணியாக்கி கொண்டார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் மீது களங்கம் செலுத்திவிட்டனர். அடுத்து, ஸ்ரீ கிருஷ்ணர் சத்யுகத்தை சேர்ந்த இளவரசர் அவர் திருமணத்திற்கு பின் ஸ்ரீ நாராயணன் என அழைக்கப்படுகின்றார்.அதனால் தான் எந்த சாஸ்திரங்களிலும் ஸ்ரீ நாராயணருடைய குழந்தை பருவம் சொல்லப்படவில்லை. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிறந்த தேதி, நிறைவடைந்த தேதி குறிப்பிடுகின்றனர். ஆனால், எங்குமே பரமாத்மா பிறந்தார், வாழ்ந்தார், இறந்தார் என்று கேள்விப்பட்டதே இல்லை.
ஏனென்றால் பரமாத்மா என்றாலே உடலற்றவர். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தவுடன் சிறைக்கதவுகள் திறந்துகொண்டது என்பது இந்த அசுர லோகம் முடிவுக்கு வருகின்றது என்பதை குறிப்பதாகும். பிறப்பு,இறப்பில் வராத சிவபரமாத்மா கலியுக இறுதியில் சிருஷ்டியில் ஆரம்பம், மத்திமம், இறுதி மூன்று நிலையை விளக்குகின்றார். இந்த மூன்று நிலையை புத்தியில் சுற்றுவதால் கலியுக நரக அசுர எண்ணங்கள் அழிந்துவிடும். இதுதான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் இருக்கும் சக்ராயுதம், இதை ஈசன் பெருமாளுக்கு கொடுத்ததை இன்றும் புராணங்களில் காணலாம்.ஆனால், ஈசன் யாரென்று தெரியாத காரணத்தால் சங்கரரை ஈசன் என்று சொல்லிவிட்டனர். அடுத்து, தனக்கும் ஜாம்பவதிக்கும் குழந்தை வரம் ஈசனிடமிருந்து கடும் தவத்திற்கு பின்
ஸ்ரீ கிருஷ்ணர் பெற்றார் என்றால் ஒரு பரமாத்மா என்பவர் அனைத்து சக்திகளும் நிரம்பபெற்றவர் அவருக்கும் மேலான சக்தியை உடையவர் ஒருவரும் உலகில் இல்லை.ஒரு தடவை ஒருவர் பிறவியெடுத்து பிறப்பு இறப்பில் வருகின்றார் என்றால் அவர் பிறவி சக்கரத்தில் வருபவராவார் ஏனென்றால் ஒரு குழந்தைக்கு பிறப்பு கொடுக்கும் ஒருவர் அதனுடைய பாவ புண்ணியங்களில் பங்கு பெறுபவர் கர்ம கணக்கின் படி ஆகின்றார் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனிருத்தன் என்ற பேரன் இருப்பதை நாம் அறியமுடிகின்றது.மேலும்,
ஸ்ரீ கிருஷ்ணரின் இன்னொரு மகனான சாம்பன் கர்ப்பிணி வேடம் போட்டு முனிவர்களை கேலி செய்யும் குறிப்பு சிருஷ்டியில் பிறவி சக்கரத்தில் ஆன்மா ஆண்,பெண் என்ற வேடமணிந்து பிறவி சக்கரத்தில் வருவதை குறிப்பதாகும்..,
உலக்கையால் அழிவு என்பது இப்பொழுது நடக்கப்போகும் மூன்றாம் உலகப்போர் எனும்
மகாபாரத யுத்தத்தை குறிப்பதாகும்...
இதில் உலக்கை என்பது அழிவிற்காக கண்டுபிடிக்க
பட்டுள்ள ஏவுகணைகளாகும்..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,எனவே, உலகின் இறுதியான இந்த காலகட்டத்தில் ஜோதியான தந்தை பரமாத்மா சிவன் தரும் மகாமந்திரம் "மன்மனாபவ" என்பதாகும். அதாவது உன்னை ஆன்மா என நெற்றியில் ஜோதியாக உணர்ந்து உன் தந்தை சிவபெருமானாகிய என்னை உடலற்ற ஜோதியாக நினைவுசெய்.அப்பொழுது உன் ஆன்மாவில் நீ ஜென்ம ஜென்மமாய் சேர்த்து வைத்த பாவங்கள் அழிந்து சத்கதி அடைவாய். இதுவே ராஜயோகம்..இப்பொழுது
ஸ்ரீ கிருஷ்ணரின் சத்யுகம் சிவபரமாத்மாவால்
பூமியில் வருகின்றது.நாமும் ஸ்ரீகிருஷ்ணர் உலகிற்கு செல்ல அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தில் இலவச ராஜயோகம் கற்று மகிழ்வோம்... வாழ்த்துக்கள்.. ஓம்சாந்தி..

.jpeg
)





கருத்துகள் இல்லை