ஞானசார தேரரின் பாதுகாப்பு அதிகாரி உயிரை மாய்த்துள்ளார்.


கலபொட அத்தே ஞானசார தேரர் தங்கியிருக்கும் ராஜகிரிய, நாவல சத்தர்ம ராஜிக விஹாரையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் உ**யிரை மா**த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்தவர் அனில் உதயசிறி குணவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


மேலும், உ**யிரிழந்த கான்ஸ்டபிள் நீண்டகாலமாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


"உதவி தேவைப்படுபவர்கள் இலங்கையின் தேசிய மனநல உதவி எண்ணான 1926 ஐத் தொடர்பு கொள்ளவும்."


#BreakingNews #PublicNews #SriLanka #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #awareness #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews #SLPolice

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.