கண் பாதிப்புக்குள்ளான அனைவரும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பினர்.!


நேற்று முன்தினம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375 பேர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.


தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர், கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


சிகிச்சைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள்.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.