இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய குற்றவாளி!!

 



டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, இன்று காலை சுமார் 5:20 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்'  சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின்  (Red Notice) கீழ் அழைத்துவரப்பட்டுள்ளார்.

தற்போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.