சின்ன சின்ன ஆசை - ஒரு பார்வை!!

 



'சுயதேடல் 'நம்மள சுற்றி இருக்கறவங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை..

ஆனால் இந்த சுயதேடல் உள்ள பெண்கள் வாழ்க்கைல நிறைவு எங்க கிடைக்கும்ன்னு தேடிட்டே இருப்பாங்க.. இவர்களுக்கு இவர்கள் தான் ஆபத்தானவங்க..

அதிலும் படித்த மற்றும் அதீத கற்பனை, ரசனை உள்ள பெண்கள் தனக்குள்ளே தேடிக்கிட்டே தான் இருப்பாங்க...

இதற்கு வயசெல்லாம் ஒரு காரணியே கிடையாது..


சின்ன சின்ன ஆசை'   மலையாளத்திலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட படம்..

வர்ஷா வாசுதேவ் பெண் இயக்குனர்..

இந்த படம் சொல்லும் கருத்து என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவேயில்லை..

நான் முன்னர் சொன்னது போல் சுயதேடலுக்கு வயது கிடையாது.. சூழ்நிலை தான் காரணம்..


அந்த படத்தின் நாயகி மதுபாலா..

52 வயது பெண்மணி.. வாழக்கையில் நிறைய ஏக்கங்களோடு பயணித்துருக்கிறாள்..

வாரணாசியில் அவருடன் வந்த சுற்றுலா குரூப்பில் இருந்து வழி தவறி விடுகிறார்..

அந்த ஊரில் அவருக்கு உதவும் நபருடன் நட்பாகிறார்.. அவர் அந்த ஒரு நாளில் மதுபாலாவின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி சந்தோசப்படுகிறார்..


இந்தக் கதை எல்லாம் சரி தான்.. ஆனால் 52 வயது என்பது வாழ்க்கையை வாழ்ந்து விட்டதற்கான வயது இல்லை..

அந்த வயதுடையவர்களுக்கும் ஏக்கம் இருக்கும் ஆசை இருக்கும், நட்பு இருக்கும் என்று காட்டி இயல்பாக மனதில் தோன்றும் எண்ணங்களை ஏன் இவ்வளவு பெரிது படுத்தி ஒரு படத்தின் 

மூலம் இதைச் சொல்ல வேண்டியதன் அவசியம் இல்லை..

இந்தக் கருத்தைச் சொல்ல 60 க்கு மேல் உள்ள பெண்களின் ஏக்கங்களாக, தனிமை, துணை ஆகியவைகளோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கலாம்..


50 + பெண்களைக் கவனித்திருக்கிறேன்...இன்று படித்து தங்களை அழகாகவும், ரசனையோடு வாழ்க்கையை வாழவும் செய்கின்றனர்..

இந்த படம் அவர்களுக்கு எந்த ஆறுதலையும் தரப் போவதில்லை..

மதுபாலாவின் வயதை மையப் படுத்தியே இந்த படம் நகரும்..

நான் புத்தகங்களை விட அதிகம் மனிதர்களை வாசிக்கிறேன்..

வீடு, குடும்பம், குழந்தை என இருந்த என் அம்மா, பாட்டி காலத்து பெண்களை இன்றும் பார்க்கிறேன்... 

அவர்களிடம் பேசியிருக்கிறேன்.. வாழ்க்கை இது தான்.. இதைத்தாண்டி எதுவும் யோசிக்கவில்லை. இந்த மாதிரி பெண்கள்   ஆண்களுக்கு மிகவும் வசதியாகி விடுகிறது 😄..

அவர்களைப் பற்றி பிரச்சனை இல்லை..

ஆனால் வாழ்க்கையை நிறைவாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு சுயதேடல் மிகுந்த போராட்டக் களமாக்கி விடுகிறது வாழ்க்கையை....


இந்த படம் 52 வயது பெண்ணுக்கானது இல்லை...

60,  65 வயது ஏக்கங்களோடு வாழும் பென்ணுக்கானது.. வயதைக் காட்டி இன்னும் இந்த படம் நன்றாக வாழ்பவர்களையும் demotivate பண்ணுவதாக இருக்கிறது..


மதுபாலா காசியின் தெருவில் திருடனைப் பிடிக்க ஓடுகிறார்.. எவ்வளவு energetic....

ஓரே நாளில் வாழ்ந்து விட்டதாகக் காட்டி அவர் இறந்து போவதாகவும் காட்டியிருக்கிறார்கள்...

இந்த மாதிரி படங்கள் பெண்களின் வலியைச் சொல்கிறதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட வயதுக் காலங்களில் உள்ளவர்களை இயல்பாக அழகாக வாழ்க்கையை வாழ்பவர்களின் மனதை கனமாக்கவே செய்கிறது...


இந்த படத்தின் ஓரே ஒரு பிளஸ் என்றால் காசி வீதியின் தெருக்கள் அமைப்பு...

அருமையான ஒளிப்பதிவு.

மற்றபடி சிறப்பாக எதுவும் இல்லை..


புவனா 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.