காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு
பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியான நிலையில், குறித்த மயக்கவியல் வைத்திய நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர், மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் உள்ள பாறையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், வைத்தியரின் உடலுக்கு அருகில் ஒரு வகை மருந்து, மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை