இலங்கை குற்றவாளி துபாயில் கைது!


டுபாயில்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான் என்பவரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் வனாதே சது என்ற அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.