பரீட்சைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
உயர்தரப் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மையமும் இணைந்து 5ஆம் திகதி கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திட்டமிடப்படும். பொதுவாக ஓகஸ்ட் மாதம் குறைந்த மழைப்பொழிவு காணப்படும் காலமாகும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை