பெண்களுக்காக!!

 




கொஞ்சம் பெரிய பதிவு. படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பெண்களில் பலரும் பார்க்கவேண்டிய பேட்டி, அனுபமா பரமேஸ்வரன், தன்யா வர்மாவுக்குக் (Iamwithdhanyavarma) கொடுத்திருக்கும் நேற்று வெளியான பேட்டி. லிங்க், வழக்கம்போல கமெண்ட்டில்.



சமீபத்தில் தனக்கு நிகழ்ந்த காதல் பிரிவின் கொடுமைகளைக் குறித்துப் பேசுகிறார். யாரென்று சொல்லாமல், அந்த உறவு,பிரிவிற்கான காரணம்; உறவு எங்கெங்கே தன்னை அடக்கி ஆண்டது என்பதை மிக அழகாக, குறைந்த சொற்களில் தெளிவாகச் சொல்கிறார். தான் காதலித்தவன் ஒரு நார்ஸிஸ்டிக் என்கிறார்.


Narcissism என்பது குறித்து அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக: கிரேக்க மித்தாலஜியில் சொல்லப்படுவது இது. ரோமைச் சேர்ந்த கவிஞர் Ovid எழுதிய கவிதை வழி சொல்லப்படும் ஒரு கதை. நார்ஸிஸஸ் என்பவன், தன்னைக் குறித்த சுயமோகத்திலே இருந்து, பலரது காதலை தவிர்த்ததால், "நீ உன்னையே ரசி" என்று கடவுளால் தண்டிக்கப்பட்டவன். ஒரு நதியில் அவனது பிம்பத்தை அவனே ரசித்தபடியே இருக்க விதிக்கப்படுகிறான்.


அவன், சுய உணர்வு பெற்று "அந்த பிம்பம் தன்னைத் திரும்பக் காதலிக்காது' என்று உணரும்போது அந்த ஏக்கத்திலேயே அங்கேயே உயிரை விடுகிறான்.


அனுபமாவுக்கு வாய்த்த காதலனும் அப்படித்தான் என்கிறார் அனுபமா. அதற்காக அவர் சொல்லும் விஷயங்களை தயவு செய்து பெண்கள் கேட்டு /  பார்த்துத் தெளிய வேண்டும். அனுபமா பேசியவற்றை சுருக்கமாகச் சொல்கிறேன்.


"மொதல்ல அவங்க நம்மளோட அடிப்படை இயல்புகளையெல்லாம் கவனிச்சு, நானும் அப்டித்தானு காமிச்சுக்குவாங்க. உதாரணமா நமக்கான வலிகளைச் சொல்றப்ப, 'இதே மாதிரி எனக்கும் நடந்துருக்கு'னு சொல்வாங்க. நம்ம அப்பா, அம்மாகூட நம்மளோட இந்த சைடை கேட்டதில்லயேனு நாம உருகுவோம்.


இதுதான் நார்ஸிஸமோட Love Bombing Face. இதுகூடவே Controlling face ஆரம்பிக்கும்.  அந்த டைம் அவ்வளோ ஸ்வீட்டா இருப்பாங்க. கடுமையா எதையும் பேச மட்டாங்க. எப்டினு சொல்றேன்... 


நாம செமயா மாடர்ன் டிரஸ் விரும்பற ஆளா இருப்போம்.. ஒருநாள் சுடிதார் போடுவோம்...  "ஹேய்ய்ய்ய்.. இந்த சுடிதார்ல செமயா இருக்க.. இப்பதான் நீ wife materialஆ இருக்க"-னு சொல்வாங்க. நீங்க உருகி, "ஐ.. என் ஆளுக்கு சுடிதார் பிடிக்குது’ன்னு ஒண்ணு.. ரெண்டுனு ஆரம்பிச்சு மாடர்ன் டிரஸ் கம்மியாகி இதெல்லாம் பீரோல நிறையும். நமக்கே தெரியாம நம்மளை மாத்துவாங்க.


ஒரு டின்னர்ல கலகலனு பேசற நீங்க, "அவனுக்குப் பிடிக்காது" அப்டினு அமைதியா இருப்பீங்க. ஒரு நிகழ்வுக்குப் போவீங்க. ஸ்லீவ்லெஸ் இருக்கும். "பேபி.. அங்க எவ்ளோ ஏ.சி இருக்கும்? ஸ்லீவ்லெஸ் வேணுமா"ன்னு கேட்பான். 'வாவ்... எவ்ளோ அக்கறை'னு நாமளும் மாத்திக்குவோம். அடுத்தடுத்த நிகழ்வுக்கு நாமளே போட்டோ அனுப்ச்சு  'இதப்போடவா' அப்டினு கேக்கற அளவு நாம மாறிடுவோம்.   


சோஷியல் மீடியால ஒரு போஸ்ட் போடுவீங்க. அவன் கூப்டு "பேபி..  இப்டிலாம் கமெண்ட் பண்றானுக பாரு..” ம்பான். உடனே டிலிட் பண்ணிருவோம். “அய்யோ இவனுக்கு நம்ம மேல எவ்வளவு அக்கறை” அப்டினு விழுந்துருவோம். ஸோ, என்ன பண்ணுவோம்..? போஸ்ட் போடறதுக்கு முன்ன அவனுக்கு அனுப்ச்சுக் கேக்கற நிலைமைக்கு நாமளே மாறிடுவோம்.. 


இப்படி கொஞ்சம் கொஞ்சமா ஒரு மரமா இருக்கற நம்மளோட கிளைகளை ஒவ்வொண்ணா கட் பண்ணுவான். அத மீறி நடந்துட்டா, தண்டனைகள் இருக்கும். ஒருநாள் பேசாம இருக்கறது, பல நாள் பேசாம இருக்கறது இப்டி இருக்கும். பேசினாலும் affection withdrawal இருக்கும். 


ரொம்ப சாதாரணமா அவங்ககிட்ட எது பேசும்போதும், உங்க மனசு ஒரு தடவ மனசுல ரிஹர்சல் பாத்துட்டுத்தான் பேசும். அப்டி நீங்க பழகிடுவீங்க. அவ்ளோ ஸ்லோவா அந்த ப்ராசஸ் நடக்கும், உங்க குடும்பம், அவன் குடும்பம், நட்பு வட்டாரம்னு உங்க காதல் கதை பெருமையா பேசப்பட்டிட்டிருக்கும். அதுக்கப்பறம் இதெல்லாம் நடக்கறப்ப நாம நம்ம வட்டாரத்துல இவனோட இந்த controlling dark sideஐ நாம சொல்லவே மாட்டோம்;


ஒருநாள் காதல்ல திளைக்க வைக்கற அம்பியா இருப்பான். ஒருநாள் நம்மள யாரும் கொன்னாக்கூட திரும்பியே பாக்காத அந்நியனா இருப்பான். அடுத்த நாள் அவன் கொடுக்கற காதலை நம்மளால தாங்கவே முடியாது. கொழந்தை மாதிரி ‘அதெல்லாம் பண்ணமாட்டேன்.. என்னை மன்னிச்சுடு’ன்னு கதறுவான். அதுக்கப்பறம் Love Bombingல ஆரம்பிச்சு எல்லாம் திரும்பத் திரும்ப நடக்கும். இதுதான் நார்ஸிஸ்டிக் பிஹேவியர். இந்தக் காலக்கட்டத்துல நாம எதிர்கொள்ற “எப்டி இருக்கீங்க?” அப்டின்ற கேள்விக்குக் கூட பயப்படுவோம்” என்று பலதும் சொல்கிற அனுபமா, “Cognitive dissonance” என்கிற விஷயத்தைப் பற்றியும் பேசுகிறார். 


இன்னும் ஏழெட்டு நிமிடம் பாக்கி இருக்கும் அந்தப் பேட்டியை, நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுதச் சொல்கிறது அச்சொற்றொடர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.