இன்று வெப்பநிலை உயர்வு!!
இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (16.08.2026) வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறண்ட வானிலை அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
இதற்கிடையில், நிலவும் வறண்ட வானிலை அனுராதபுரம், பொலன்னருவை, யாழ்ப்பாணம், அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது.
ஏறக்குறைய நான்கு மாதங்களாக மழை இல்லாததால், அந்த மாவட்டங்களில் உள்ள பல சிறிய குளங்கள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. இதன் விளைவாக, கால்நடைகள் மற்றும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வறண்ட வானிலை காரணமாக மிஹிந்தலையில் சுமார் 30 ஏக்கர் நெல் வயல்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை