கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் பலி!!

 


இந்தியாவின் - பீகாரில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


இன்று அதிகாலை (17) சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நிலையில், கோவில் வளாகத்தில் மின்சார கம்பியொன்று அறுந்து விழுந்ததால், மக்கள் அச்சத்தில் ஓடியபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

  இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

மேலும், அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும், நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.