காணி அபகரிப்பு தொடர்பில் வெளியான கருத்து!!




 ராஜபக்சர்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் - வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின், முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளை ஏற்க மறுக்கின்றது. தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த ராஜபக்சர்களையோ அல்லது மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஏனைய அரசாங்களையோ ஒத்ததாக தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றது.

வசாவிளானில் அமையப் பெறும் இராணுவ வைத்தியசாலை பொதுமக்களின் காணிகளை இராணுவ அதிகாரங்களை பயன்படுத்தி அங்கு வாழ்ந்த பூர்வீக கிராம மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டு, அவர்களை வீடு இல்லாதவர்கள் போன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்பொது அமைக்கப்பட்டு வரும் சட்டங்கள், ஒழுங்குவிதிகளுக்கு புறம்பான இந்த இராணுவ வைத்தியசாலையை அகற்ற வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை நானே வழிமொழிந்தேன்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.