யாழில் பொலிசாரால் குழப்பம்!!
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் இடம்பெற்ற மாபெரும் போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் ஒன்று அரங்கேறியுள்ளது.
குறித்த போராட்டமானது உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே நடத்தப்பட்டது.
இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் அராஜகங்களைப் புரிந்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை