போராட்ட களமாக மாறிய கல்முனை வைத்தியசாலை!!




 கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள், சீருடைக்கு மேலதிகமாக ஹிஜாப் அல்லது பர்தா அணிவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்தே வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் ஊழியர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக் கொள்வதுடன், வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.