மாஸ்லோவின் படிநிலைக்கோட்பாடு!!





 அமெரிக்க உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ (Abraham Maslow) 1943-ம் ஆண்டு உருவாக்கிய மாஸ்லோவின் தேவைகளின் படிநிலைக் கோட்பாடு, மனிதனின் அடிப்படைத் தேவைகள் முதல் உயரிய லட்சியங்கள் வரை 5 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை விளக்குகிறது. கீழ்மட்ட தேவைகள் பூர்த்தியான பின்னரே அடுத்தடுத்த மேல்மட்ட தேவைகள் ஒரு மனிதனை இயக்குகின்றன. 



அமெரிக்க உளவியலாளர் மாஸ்லோ பற்றிய சில குறிப்புகளை படிக்க கிடைத்தது, மனித வாழ்க்கை குறித்து மாஸ்லோவின்  " தேவைகளின் படிநிலைக் கோட்பாடு" பற்றிய வெளிப்படுத்தல் சிந்தனைக்கு ஏற்ற ஒரு விடயமாகும். 


ஒரு மனித வாழ்வானது அவருடைய ஒவ்வொரு கோட்பாட்டு படிநிலைகளோடு பொருந்திப்போவதைக் காணும் போது, இன்றைய சமூக பொருளாதார வாழ்வியல் சூழலில் எந்த அளவுக்கு அவை அற்றுப் போயுள்ளன என்பதை ஆழமாக உணர்வது அவசியம்.


பிள்ளைப்பராயம் முதலே இவை புகட்டப்பட வேண்டும்.





மாஸ்லோவின் 5 நிலைகள் (The Five Levels)


1)

உடல் தேவைகள் (Physiological Needs): 


உணவு, நீர், உடை மற்றும் இருப்பிடம் போன்ற உயிர் வாழ்வதற்கு மிக அவசியமான அடிப்படைத் தேவைகள்.


2)

பாதுகாப்புத் தேவைகள் (Safety Needs):



 உடல் பாதுகாப்பு, வேலை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு, மற்றும் ஆரோக்கியம் சார்ந்தவை.


3)

சமூகத் தேவைகள் (Social Needs): 


அன்பு, நட்பு, குடும்பம் மற்றும் சமூகத்தில் ஒருவரோடு இணைந்து வாழுதல் போன்ற பற்றுதல் உணர்வுகள்.


4)

மதிப்புத் தேவைகள் (Esteem Needs): 


தன் மீது தனக்குள்ள மரியாதை, பிறரின் அங்கீகாரம், புகழ் மற்றும் சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து.


5)

சுய-நிறைவு தேவைகள் (Self-Actualization): ஒருவர் தனது முழுத் திறமையையும் உணர்ந்து, தான் என்னவாக விரும்பினானோ அந்த நிலையை முழுமையாக அடைவது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.