சென்னைக்கு புறப்பட்ட சொகுசு கப்பல்!!


இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்த குறித்த கப்பல் இன்றைய தினம் காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

இக்கப்பலில் லண்டன், இந்தியா, ஜேர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர்.

இலங்கைதேநீர் யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர் அவர்கள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பி கப்பல் மூலம் சென்னை நோக்கி பயணித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.