ஜனாதிபதியை சாடும் நாமல்!!
அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேபாளத்திற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்றும் இலங்கையில் மக்களை ஏமாற்றியது போன்று நேபாளத்தையும் இந்த அரசாங்கம் ஏமாற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
விவசாயிகளுக்கு கூறிய பொய்யை போன்று நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டுவிட வேண்டாம் என நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் தகரம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் வீட்டிற்கு 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை