அடுத்தது யார்!!




 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.