கடலில் கொட்டி கிடக்கும் வளங்கள்!!
மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
I
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் மூலம் இந்த இருப்பு உள்ளதென நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும்
உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது. அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும்.
மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது.
இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை