இலங்கை திரும்புவோருக்கான செய்தி!!


சுவிட்சர்லாந்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து பின்னர் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மாதாந்திர AHV ஓய்வூதியத் தொகையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பணியாற்றி, அந்நாட்டின் சமூகப் பாதுகாப்பு மற்றும் முதியோர் ஓய்வூதியக் காப்புறுதி திட்டத்தில் பங்களிப்பு செலுத்தியுள்ள தகுதியுடையவர்களுக்கு இந்தத் திட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சுவிட்சர்லாந்திலிருந்து நிரந்தரமாக இலங்கைக்குச் செல்ல விரும்பும் இலங்கைப் பிரஜைகள், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாதாந்திர AHV ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை குறிப்பாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து, ஓய்வுபெறும் வயதை அடைந்த பின்னர் இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இலங்கைப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.