தமிழ் கட்சிகளின் முக்கிய முயற்சி!!




 மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். 


இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் பற்றிய விபரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றினர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.