கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவைச் சுற்றியுள்ள மோசமான காலநிலை ஓரளவுக்கு தணிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
எவ்வாறாயினும், புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்

.jpeg
)





கருத்துகள் இல்லை