லண்டனின் பிரபல இரட்டை தட்டு பேரூந்து!
லண்டனை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வரும் சிவப்பு பேருந்து!
லண்டன் என்றதும் Big Ben, London Bridge, மழை… இவற்றுடன் சேர்ந்து மனதில் தோன்றும் இன்னொரு காட்சி — சிவப்பு நிற இரட்டைத் தட்டு பேருந்து!
இரண்டு மாடிகள் கொண்ட இந்தப் பேருந்து, சாதாரண போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல. தற்போது லண்டன் நகரத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது.
மேலே ஒரு தட்டு… கீழே ஒரு தட்டு…
கீழ்தட்டில் உட்கார்ந்து பயணம் செய்வதைவிட, மேல்தட்டில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து லண்டன் நகரத்தைப் பார்ப்பதில் ஒரு தனி அனுபவம் இருக்கிறது. சாலையோர கட்டிடங்கள், பழமையான தேவாலயங்கள், பரபரப்பான வீதிகள் என நகரமே நம் கண்முன்னால் நகரும்.
பயணிகள் ஏறி இறங்குவதற்காக திறந்த பின்புற படிக்கட்டுடன் ஓடும் Routemaster பேருந்துகள், லண்டனின் நினைவுகளில் தனி இடம் பிடித்திருக்கின்றன.
இன்றைய பேருந்துகள் நவீனமானவை. வசதியான இருக்கைகள், wheelchair access, contactless payment, real-time information என தொழில்நுட்பமும் இணைந்துவிட்டது.
ஆனால் வடிவம் மாறினாலும்…
லண்டன் நகரத்தின் அந்த சிவப்பு இரட்டைத் தட்டு பேருந்தின் கவர்ச்சி மட்டும் மாறவில்லை!
குறிப்பு: லண்டன் நகரம் எப்போதும் சுறுசுறுபுடன் இருப்பதால், குறித்த பேரூந்தை தெட்டத்தெளிவாக மனித குறுக்கீடுகள் இன்றி புகைப்படம் எடுப்பது சுலபம் அல்ல. எனவெ சற்று உற்று நோக்கி பேரூந்தை இரசித்துக் கொள்ளலாம்!!
#senkathir #Trisha #Vijay #TrishaInstagram #SangeethaVijay #TrishaPost #TamilCinema #TrendingNews #TrishaVijay #VijaySangeetha #CinemaUpdates

.jpeg
)





கருத்துகள் இல்லை