இந்து குருமார்கள் ஜனாதிபதியை சந்திப்பு!📸
இன்று காலை 10.30 மணியளவில் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கும், நாட்டின் எதிர்கால சந்ததியை வீழ்ச்சிக்கு உட்படுத்தி வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கும் இந்து குருமார்கள் தமது ஆசிகளை வழங்கினர்.
குறிப்பாக, இதுபோன்ற தேசியத் தேவைகளின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து வாழும் அனைத்து இந்து குருமார்களும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்து அறநெறிப் பாடசாலைகளை நடத்துவது உள்ளிட்ட இந்து பக்தர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்காக பெற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அகோரசிவம் உமையரசு
#Tamilarul #Media #Network #Flowers #TV ##Whatsapp #tamilarulnet #Tamilarulmedia #TamilArulTV #news #tamil #temple #newpost #NewsUpdate Pragash Arul






.jpeg
)





கருத்துகள் இல்லை