ஒன்ராறியோவிற்கும் தமிழ்க் கனடிய சமூகத்திற்கும் ஒரு வரலாற்றுச் சாதனை!
ஒன்ராறியோ மாகாணத்தின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு விஜய் தணிகாசலம் அவர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள்!
ஸ்காபரோ–ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான அவர், பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தக அமைச்சகத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவித்தல், புத்தாக்கத்தை வளர்த்தல், ஒன்ராறியோவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதிய தொழில், வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முக்கியப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுக்கென அமைச்சர்கள்—உலகம் ஒரு புதிய பாதையில்!
செயற்கை நுண்ணறிவு இன்று தொழில்நுட்பத் துறையை மட்டுமல்லாமல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரச சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மாற்றியமைத்து வருகிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பல நாடுகள், AI தொடர்பான தனித்துவமான அமைச்சுப் பொறுப்புகளை உருவாக்கியுள்ளன.
2017ஆம் ஆண்டு Omar Sultan Al Olama, உலகின் முதலாவது மனித செயற்கை நுண்ணறிவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2025ஆம் ஆண்டு Evan Solomon, கனடாவின் முதலாவது மத்திய அரசின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புத்தாக்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2026ஆம் ஆண்டு Kanishka Narayan, செயற்கை நுண்ணறிவுக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2025ஆம் ஆண்டு “Diella” என்ற AI மென்பொருள், உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மெய்நிகர் அமைச்சர் என அறிமுகப்படுத்தப்பட்டது. இது மனிதர் அல்ல; அரச கொள்முதல் நடவடிக்கைகளில் உதவும் ஓர் AI அமைப்பாகும்.
2026ஆம் ஆண்டு மாண்புமிகு விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் AI துறைக்கென தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் உருவாகிவரும் இக்காலத்தில், தமிழ்க் கனடியரான விஜய் தணிகாசலம் இந்த முக்கியப் பொறுப்பை ஏற்றிருப்பது நமது சமூகத்திற்குப் பெருமையையும் புதிய தலைமுறைக்கு உத்வேகத்தையும் அளிக்கும் வரலாற்றுச் சாதனையாகும்.
அவரது தலைமைத்துவத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஒன்ராறியோ கனடாவின் முன்னணி மாகாணமாக வளர மனமார்ந்த வாழ்த்துகள்!
#vijaythanigasalam #ArtificialIntelligence #ontario #tamilcanadian #AIAdoption #innovations #HistoricMilestone #aiminster

.jpeg
)





கருத்துகள் இல்லை