அனோஜன் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை முன்வைப்பு!!

 



சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த இளைஞன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.