அனோஜன் விவகாரம் - தமிழ் தேசிய கூட்டணியின் கோரிக்கை!!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இளைஞருக்கு மனிதநேய அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நேரடியாகவும், சவூதி மன்னருக்கு இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் ஊடாகவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி கோரிக்கை மனு ஒன்றை இன்று கையளித்துள்ளது.
இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர மனுவில், "சிவராசா அனோஜன் செய்த தவறை அல்லது அவர் தெரிவித்த அவமதிப்பான கருத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ முடியாது.
இருப்பினும், இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்றல்ல. சமூக வலைத்தளத்தில் இரு நபர்களிடையே ஏற்பட்ட உணர்ச்சிவசப்பட்ட விவாதத்தின் போது எதிர்பாராதவிதமாக உருவான ஒரு கருத்தே இதுவாகும்.
தான் செய்த தவறை உடனடியாக உணர்ந்த அவர், அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டதுடன், தொடர்ந்து தன் தவறுக்காக ஆழந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.
அறியாமையினாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பேசப்பட்ட ஒரு வார்த்தைக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கம் கருணையையும் மன்னிப்பையும் மிக உயர்ந்த நற்பண்புகளாகப் போதிக்கிறது.
'பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள்; வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவான்' என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப, சவூதி மன்னரும் அரசாங்கமும் இஸ்லாத்தின் கருணை அடிப்படையில் இவருக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை