மன்னாரில் இருவர் கைது!!
மன்னார்- முழங்காவில் கடற்கரை பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கெப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்
வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முழங்காவில் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கெப் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 370 கிலோ கிராமிற்கும் அதிகமான மீன்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த, மன்னார் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 48 வயதுடைய இரண்டு (02) சந்தேக நபர்களுடன் அந்த கெப் வாகனமும் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கெப் மற்றும் மீன் தொகை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை