நீதிமன்றத்திற்குள் மோதிய பாதாள உலக குழுக்கள்!!
பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ்மல்லி தரப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் கல்கிசை நீதிமன்றத்திற்குள் வைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
படோவிட்ட அசங்க தரப்பைச் சேர்ந்த சந்தேக நபரான கருணாலுகே ஸ்ரீநாத் பிரியசாந்த பெர்னாண்டோ மற்றும் கொஸ்மல்லி தரப்பைச் சேர்ந்த சந்தேக நபரான மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு நேற்று (24.09.2026) கல்கிசை நீதிமன்றத்திற்குள் வைத்து மோதிக் கொண்டுள்ளனர்.
படோவிட்ட அசங்க தரப்பைச்பிரிவைச் சேர்ந்த ஸ்ரீநாத், நவம்பர் 2025இல் கல்கிசை சிறிபால வீதியில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஆவார்.
கொஸ்மல்லி தரப்பைச் சேர்ந்த மதுஷ்க, சமீபத்தில் தெஹிவளையின் சிறிசங்கபோ வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டை வீசி இரண்டு கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக இருவரும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை