இலஞ்சம் பெற்றவர்களுக்கு நடவடிக்கை

  



மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.



மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர்.

எனவே கடற்றொழில் அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.