கொழும்பில் வரும் மாற்றம்!!

 



கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் 100-க்கு 40 வீடுகள் 40 வருடங்களுக்கும் மேல் பழமையானவை என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.


கொழும்பு மாநகர எல்லைக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்வகிக்கப்படும் 96 அடுக்குமாடி வீட்டுத்திட்ட வளாகங்கள் காணப்படுவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மோசமான நிலையில் உள்ள இவ்வாறான வீட்டுத்திட்ட வளாகங்களை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


மேலும், தற்போதுள்ள சில பழைய வீட்டுத்திட்ட வளாகங்களுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.