சமையல் ருசி!!
எங்க வீட்டில கற்பகம் மாமின்னு ஒருத்தங்க குடியிருந்தாங்க. எனக்கு நிறைய சமையல் வகைகளை அவங்க தான் சொல்லிக்கொடுத்தாங்க. பாரம்பரியமா செய்யும் புட்டு, அதிரசம், அப்பம், வடை, சில வகை பொங்கல்கள், பண்டிகை கால சமையல், அதில் சின்ன சின்ன டெக்னிக் பெரும்பாலும் அவங்க சொல்லிக்கொடுத்தது
தான். போற போக்கில வாழ்க்கையோட பிரச்சனைக்கும் தீர்வு சொல்லுவாங்க. சிலதெல்லாம் நச்சுன்னு நமக்கு புரியும். உதாரணமா எங்க கல்யாணம் முடிஞ்சப்ப அவங்க எங்க பாட்டிகிட்ட சொன்னது, போறது விடுங்க ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாது, எவ்ளோ அர்த்தம் அதில்.
அதே மாதிரி இன்னொன்னு பூவை கசந்து மோந்தா நல்லாருக்காது. விட்டுட்டு வேலையை பார்க்கனும், இது எதோ ஒரு உறவுமுறை பிரச்சனையில சொன்னது.
அது மாதிரி சாப்பாடு. கரெக்ட்டா பத்து மணிக்கு முழு சாப்பாடும் ரெடி ஆயிரும். சாப்பாடு தவிர வேற எதும் அவ்வளவா பிடிக்காது, அதுக்கு சோத்தால அடிச்ச பிண்டம்/செவரு அப்டிம்பாங்க. மாமி உங்களை மிஸ் பண்றேன்.
டயட் அதெல்லாம் நமக்கு சுத்தமா செட் ஆகாது. எனக்குனு ஒரு ஸ்டைல் வைச்சிருக்கேன் அது எனக்கு பிடிக்கற வரைக்கும் ஃபாலோ பண்ணுவேன். அரிசியை பெரும்பாலும் தவிர்த்திருவேன்.தினமுமே கீரை, சுண்டல், முட்டை சாப்பிடுவேன். நல்லா சாப்பிடறது மாதிரி நிஜமாவே சிறப்பா சமைக்கவும் செய்வேன். இஞ்சி பூண்டு, கரம் மசாலா, பட்டை கிராம்பு ஐட்டமெல்லாம் பிடிக்காது. சிம்பிளா சீக்கிரமா சமைக்கனும், சமச்சீரானா உணவு இருக்கனும். ஒரு நாளைக்கு ஒரு ஃபுல் மீல்ஸ், அப்பறமா அதிகபட்சம் 7 மணிக்குள்ள டின்னர்.
வெளியில போன இதெல்லாம் கண்டுக்காம ரசிச்சு, பிடிச்சதை சாப்பிடுவேன். இன்னைக்கு கொங்குல மட்டும் வைக்கும் செலவு அரைச்ச முருங்கை கீரை குழம்பு, கறிவேப்பில்லை பொடியில் வறுத்த முட்டை, பீன்ஸ் பொரியல், கேரட் தயிர்பச்சடி. இந்த பிளேட்ல இருக்கும் சாப்பாடு தான், கீரை மட்டும் இன்னும் நாலு கரண்டி ஊத்தி ரசமாட்ட சாப்பிடுவேன். ஹெவியா ஆயிரும்.
வயித்தை கன்னாபின்னான்னு கட்டவேண்டியதில்லை, என்ன வயித்துக்குள்ள போகுதுன்னு கவனிச்சா போதும்ங்கறது என்னோட டயட் ஐடியா.
நீங்க என்ன சாப்பிட்டீங்க?
முருங்கை செலவு குழம்பு ரெசிபி
அரைக்க : ஊற வைச்ச துவரம்பருப்பு ரெண்டு ஸ்பூன், மல்லி, சீரகம், மிளகு, வரமிளகா, தேங்கா முக்காவாசி அரைச்சிட்டு அதோட பத்து சின்னவெங்காயம் நாலுபல் பூண்டு சேர்த்து நைசா அரைக்கவும். தேங்கா எண்ணெயில் கடுகு, வரமிளகா, கறிவேப்பிலை தாளிச்சு அரைச்சதை ஊத்தி,மஞ்சத்தூள் உப்பு தேவையான தண்ணி சேர்த்து ரெண்டு கொதிவிட்டு கீரையை சேர்த்து அடுப்பை ஆஃப் பண்ணவும். அந்த சூட்டிலையே கீரை வெந்துடும்
பகிர்வு

.jpeg
)





கருத்துகள் இல்லை