துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி!!

 


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலை காட்டுப்பகுதியில் நேற்றிரவு (27) மிருக வேட்டையில் ஈடுபட்டபோது உள்ளூர் துப்பாக்கி தவறுதலாக பின்புறமாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இருவர் மிருக வேட்டைக்காக உள்ளூர் துப்பாக்கியுடன் வேட்டையாடிய பொழுது தவறுதலாக அவர்கள் பயன்படுத்திய உள்ளூர் துப்பாக்கி பின்புறம் வெடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் செபஸ்டியாம் பிள்ளை ரோஷன் இருதயதாஸ் என்ற 48 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.