எகிப்தில் முக்கிய சம்பவம்!!

 




போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 11 பேருக்கு மரணத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி, போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டமை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மிஷன் இம்போசிபிள்' என்ற குற்றவியல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த 39 வயதான சாரா கலீஃபா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்த வழக்கில் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, எகிப்திய சட்டப்படி நாட்டின் தலைமை மதகுருவின் (Grand Mufti) ஆலோசனைப் பெறப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 750 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இலத்திரனியல் சான்றுகள் மற்றும் 20 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாரா கலீஃபாவின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.