நாமல் கூறிய முக்கிய தகவல்!!
![]() |
"எம்மை அரசியல் பழிவாங்கல்கள் மூலம் முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும்" சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறையில் இருக்கும் கைதிகளின் மனித உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், சுதந்திரம் மட்டுமே பறிக்கப்பட வேண்டுமே தவிர, மனித கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான தோல்விகளை விமர்சித்து, மக்கள் நலனுக்கான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை