ஜனாதிபதி தெரிவித்த முக்கிய கருத்து!!
![]() |
ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதில் எந்த வரம்பும் இல்லை, இது தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச உதவி பெறப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கம்பஹாவில் இன்று(27) நடைபெற்ற “நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி” என்ற மாபெரும் பேரணி கலந்துகொண்டபோது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"திருடர்களைத் தண்டிப்பதில் எந்த வரம்பும் இல்லை. இந்த பதவிக்காலத்தின் மீதமுள்ள மூன்று ஆண்டுகளிலும் நாங்கள் இப்பணியைத் தொடருவோம், அடுத்த பதவிக்காலத்திலும் அவர்களைத் தொடர்ந்து விசாரிப்போம்.
இவை முக்கியமான விசாரணைகள் இவற்றுக்கு சர்வதேச உதவி தேவைப்படுவதுடன், காலமும் எடுக்கும். பழிவாங்கும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை.
இதை நான் உண்மையாகவே கூறுகிறேன், யாருடைய மீதும் பழிவாங்கும் விருப்பம் எங்களுக்கு இல்லை. நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? அவர்களைப் போல எங்களுக்கு நிலத் தகராறுகளோ அல்லது குடும்பப் பகையோ இல்லை.
தனிப்பட்ட விரோதங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. இதில் எதுவும் பழிவாங்கும் செயல் அல்ல. பழிவாங்குதலின் வரலாறு எங்களுக்குத் தெரியும், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
2010 இல், சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார், தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோது, அவர் எங்களுடன் ஒரு தனியார் ஹோட்டலில் முடிவுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அந்த ஹோட்டலிலேயே இராணுவம் சோதனை நடத்தியது - முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே அவர்கள் அந்தச் சோதனையை மேற்கொண்டனர். பழிவாங்குதல் என்பது அப்படித்தான் இருக்கும்.
அதன்பிறகு, இராணுவப் பிரிவு ஒன்று அவரது அலுவலகத்திற்குள் புகுந்து, அவரைக் கடத்திச் சென்று, தங்கள் தரப்பைச் சேர்ந்த ஜீப் வண்டி ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றியது.
தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே அவர்கள் பழிவாங்கிய விதம் இதுதான். நாங்கள் அத்தகைய பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதில்லை.
2019 இல் ஜனாதிபதி பதவியை ஏற்ற பிறகு, 600 சிஐடி (CID) அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டது. பிரதமர் நியமிக்கப்படுவதற்கு முன்பே சிஐடி பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்” என குறிப்பிட்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை