இலங்கைக்கான எச்சரிக்கை!!

 



இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


தற்போது நிலவும் வானிலையின்படி மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மேகமூட்டமான வானம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு, நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலுக்கு எதிராக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.