ஊழல்வாதிகளுக்கு மன்னிப்பு இல்லை - ஜனாதிபதி!!
இதன்போது ஊழல்வாதிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸ்அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவர் கூட விடுபடமாட்டார் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
புளத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்து அரசாங்கத்தின் உள்விவகாரங்களை ஆராய்ந்த பின்னரே, இடம்பெற்றுள்ள தவறுகளின் அளவை அரசாங்கம் கண்டறிந்ததாகக் கூறியுள்ளார்.
"நாங்கள் வெளியே இருந்தபோது ஊழல்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்று ஒவ்வொன்றாக ஆராயும்போது, நமது நாடு எவ்வளவு பெரிய தவறுகளை எதிர்கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது" என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை