நோர்வேயில் போறுப்பேற்ற தமிழ் பெண்ணுக்கு ஜனாதிபதி வாழ்த்து!!




 நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.