எண்ணெய் வழித்தடங்கள் முடக்கம்!!




 ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது பிரதான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.


இது உலகளாவிய சக்தி வள சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் வயலிலிருந்து செங்கடலின் யான்பு துறைமுகம் வரை 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்துள்ள இந்த எண்ணெய் குழாய் தொகுதி, ரியாத் மற்றும் மதினா பகுதிகளில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சவூதி ஆற்றல் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்தே இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈராக் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தனது எல்லைப் பகுதியை தாக்குதல்களுக்கு பயன்படுத்த அனுமதித்த குற்றச்சாட்டில் அப்பகுதி இராணுவத் தளபதியை ஈராக் அரசு பதவி நீக்கம் செய்துள்ளதுடன், ஈரான் எல்லையையும் மூடியுள்ளது.

சவூதியின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை இந்த குழாய் பாதை மூலமே கொண்டு செல்லப்படுகின்றது

ஹோர்மூஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியா பயன்படுத்திய பிரதான மாற்றுப் பாதையான இதுவும் தற்போது மூடப்பட்டுள்ளதால், உலக சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளதுடன், உலகளாவிய எரியபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.