யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மோசடிகள். !
யாழ் மாவட்ட செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன் நுழைந்த மருதலிங்கம் பிரதீபன் "நெப்சிப்" திட்டத்தின் மூலம் பாரிய கொள்ளையை அடித்தவன்.
பிரதேச செயலகங்களுக்கு பகிர்ந்து வழங்கிய உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களில் மோசடி செய்ததற்கு கை மாறாக கோப்பாய் பிரதேச செயலாளராக அழகு பார்க்கப்பட்டவன்.
பின்னர் 2019 நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் அப்போதைய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தற்போதைய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் பிரதீபனின் மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டதன் காரணமாக கோப்பாயில் இருந்து முசலிக்கு தூக்கி எறியப்பட்டவன்
பின்னர் அங்கிருந்து புது குடியிருப்பு பிரதேச செயலாளராக சில காலம் கடமையாற்றிய நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் காலை நக்கி யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக பொறுப்பேற்றான்.
அப்போதைய யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணபதிப்பிள்ளை மகேசன் ஒரு நேர்மையான அரச அதிகாரி இவனின் செயற்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் தன்னிடம் இருந்த சில பொறுப்புகளை எழுத்து மூலம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபனிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதன் பிரதிபலனாக யாழ் மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் கைவசம் இருந்த பொருட்களை அங்கஜன் கேட்காமலே தனது விசுவாசத்தை காட்டுவதற்காக இரவோடு இரவாக மாவட்ட செயலகத்திலிருந்து வாகனங்களில் ஏற்றியவன்.
இவ்வாறு பல மோசடிகளின் சொந்தக்காரன் என்று தேசிய மக்கள் சக்தியின் விசுவாசியாக மாறி தனது விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக மாவட்ட செயலக நிர்வாகத்தை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறான்.
மஹிந்த, கோட்டா, மைத்திரி , காலம் தொடக்கம் ஒவ்வொரு மாதமும் இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றி தேசிய மக்கள் சக்தியின் திறமையற்ற எம்பிமாரை காப்பாற்றியுள்ளான்.
தொடரும்....

.jpeg
)





கருத்துகள் இல்லை