ஈரானில் யாரும் இல்லை - ரம்ப்!!

 




அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் தலைவர்கள் எவரும் எஞ்சியிருக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரைக் கண்டுபிடிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, ஈரானைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.



ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “அவர்களிடம் விமானங்கள் இல்லை, கப்பல்கள் இல்லை, தலைவர்கள் இல்லை, எதுவுமே இல்லை. அவர்களின் முதல் நிலைத் தலைவர் இல்லை; இரண்டாம் நிலைத் தலைவரும் இல்லை.

இதற்கு மேல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், நாம் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்தக் கருத்துகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

போர் ஆரம்பித்த முதல் சில வாரங்களில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனியும் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அறிக்கைகளை வெளியிட்டு வந்தாலும், இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. கடந்த ஒன்பது மாதங்களாக இடையிடையே மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ஈரானும், தற்காலிகமாகத் தாக்குதல்களை நிறுத்தியுள்ளன.

இருப்பினும், நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படலாம் என ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்து வருகிறார். இதற்கிடையில், ட்ரம்ப் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் படையையும் 10,000 கடற்படையினர் மற்றும் கடற்படைத் தரைப்படையினரையும் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.