இளம் யுவதி கைது!!
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(15.10.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே மேற்படி யுவதி 'ஐஸ்' போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார்.
கைதான யுவதி மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை