அதிஸ்டம் பெறவுள்ள முக்கிய ராசிகள்!!

 



ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.


அந்த வகையில் செவ்வாய் அக்டோபர் 17 ஆம் திகதி ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் நவம்பர் 12 ஆம் திகதி வரை இருப்பார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கக்கூடும். அதுவும் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும், வியாபாரத்தில் நல்ல வெற்றியையும் பெறுவார்கள். இப்போது செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், புதிதாக பணத்தை முதலீடு செய்வதற்கு முன் அனைத்து அம்சங்களையும் சரிபார்ப்பது அவசியமாகும்.


கடகம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் அல்லது புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். நிதித் திட்டங்களை வகுக்கும்போது, ​​நன்கு சிந்தித்து முடிவெடுப்பது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.


விருச்சிகம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் எந்தவொரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், அதன் நடைமுறைச் சாத்தியத்தைக் கருத்தில் கொள்வது அவசியம்.


மகரம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலம் கடன் சுமை குறையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.