போராட்டம்’ திரைப்படத்தின் கதை!!
போருக்கு பிந்தைய யாழ்ப்பாணத்தின் கடற்கரை பகுதியில் வாழும் இளம் தமிழ் கால்பந்து வீரர் மில்லர் என்பவரின் கனவுகளையும் போராட்டங்களையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது ‘போராட்டம் (Poraattam – The Struggle)’ திரைப்படம்.
திறமையான கால்பந்து வீரரான மில்லரின் கனவு, இலங்கை தேசிய கால்பந்து அணியில் இடம்பெற வேண்டும் என்பதே.
ஆனால், மைதானத்துக்கு வெளியேயும் அவரை பல்வேறு சவால்கள் சூழ்கின்றன.
காதல் தோல்வி, குடும்பத்தில் அதிகரிக்கும் கடன் சுமை, பாகுபாடு, அணி தேர்வில் மீண்டும் மீண்டும் ஏற்படும் ஏமாற்றங்கள் என தொடர்ச்சியான பிரச்சினைகள் மில்லரின் மன உறுதியை சிதைக்கின்றன.
ஒரு கட்டத்தில் கனவுகளையும் நாட்டையும் விட்டு சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்லும் முடிவை அவர் பரிசீலிக்கிறார்.
இந்த சூழலில், வாழ்க்கை அவரை எந்தளவுக்கு சோதிக்கிறது? என்பதையும், அந்த போராட்டங்களை எதிர்கொண்டு மில்லர் எவ்வாறு மீண்டும் எழ முயற்சிக்கிறார்? என்பதையும் திரைப்படம் பதிவு செய்கிறது.
⚽ கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டிருந்தாலும், மீனவ சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, குடும்ப உறவுகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போருக்கு பிந்தைய சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களையும் ‘போராட்டம்’ திரையில் எடுத்துக்காட்டுகிறது.
இத்திரைப்படத்தை Raj Sivaraj இயக்கியுள்ளதுடன், IBC Productions தயாரித்துள்ளது.
Dutch-Tamil நடிகரான Regan Baskaran, மில்லர் கதாபாத்திரத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமாகிறார். அவருடன் உள்ளூர் ஈழ தமிழ் நடிகர்களும் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் இசையை Poovan Matheson அமைத்துள்ளதுடன், Vaaheesan Rasaiya உள்ளிட்ட சுயாதீன இசை கலைஞர்களின் பங்களிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
திரைப்படத்தின் சர்வதேச சிறப்பு திரையிடல்கள் ஏற்கனவே Colombo, Jaffna, Toronto, London உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுள்ள நிலையில், ‘போராட்டம்’ , ஒக்டோபர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக வெளியானது.
ஒரு கால்பந்து வீரனின் கனவை மட்டும் சொல்லாமல், கனவுகளுக்கும் வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கும் இடையில் போராடும் ஒரு தலைமுறையின் கதையாகவும் ‘போராட்டம்’ உருவாகியுள்ளது.
🎬 **Poraattam – The Struggle**
⚽ *ஒரு கனவு... பல தடைகள்... மீண்டும் எழும் ஒரு போராட்டம்.*
#Poraattam #TheStruggle #EelamTamil #TamilFilm #Jaffna #EelamTamilCinema #TamilCinema #SriLanka #JaffnaFootball #Tamil

.jpeg
)





கருத்துகள் இல்லை