பதவி உயர்வுகள் இரத்து - நீதிமன்ற உத்தரவு!




 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக (SSP) தற்போது பதவி வகித்து வந்த மூன்று அதிகாரிகளின் பதவி உயர்வுகளை இரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

.

அவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்தக் கிராமத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தமை மற்றும் அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியமைக்காக கடந்த 2010ஆம் ஆண்டில் சிறப்புச் சலுகை அடிப்படையில் பதவி உயர்வுகளைப் பெற்ற இரு அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தும் வகையில், குறித்த மூவரையும் மீண்டும் அவர்களின் பழைய பதவியான பிரதான பொலிஸ் பரிசோதகர் (CI) நிலைக்குத் தரமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகுதியற்ற முறையில் வழங்கப்பட்ட இப்பதவி உயர்வுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சரவையின் அப்போதைய தீர்மானங்களைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.​ 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.