விலை நிர்ணயிப்பு தொடர்பான சர்ச்சை¡¡
எரிபொருள் விலைச் சூத்திரத்தை மீற விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதா, என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய தொழிற்சங்கப் பேரவையின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் விலையை உயர்த்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். விலைச் சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்தப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் மீதமுள்ள நிலையில், விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களை மகிழ்விக்கும் கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவதாலேயே இது நடந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களை மகிழ்விக்கிறதா அல்லது நாட்டின் மக்களைப் பாதுகாக்கிறதா என்பதை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விலைச் சூத்திரத்திற்கு முன்பே இதற்கான செயற்பாடுகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். எமது விலைக்கு விற்காவிட்டால் புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் எரிபொருள் வரிசைகளை முடிவுக்குக் கொண்டுவர விலை உயர்த்தப்பட வேண்டும் என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறியுள்ளதாக ஆனந்த பாலித சுட்டிக்காட்டியுள்ளாா.
இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே அரசாங்கத்தின் கருத்துக்களில் காணப்படும் முரண்பாட்டை புரிந்துகொள்ள முடியும் என்றார். மேலும், ஜனாதிபதி கூறுவது போல் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொண்டு விற்பனை செய்யாவிட்டால், எரிபொருள் நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை