கச்சதீவு தொடர்பில் முக்கிய கருத்து!!
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசு சமீபத்தில் அளித்த உறுதியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரவேற்றார்.
இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தனது நாட்டின் நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நீண்டகாலமாகத் தொடரும் கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துத் திருப்தி தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்னேற்றத்தை இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு சாதகமான அறிகுறியாகக் குறிப்பிட்டார்.
இலங்கையுடனான 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு கடல்சார் ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது மாற்றியமைக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஒக்டோபர் 6 அன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான கவலைகளுக்குத் தொடர்ந்து இராஜதந்திர வழிகள் மூலமாகவே தீர்வு காணப்படும் என்றும் இந்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதேவேளையில், இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான சட்டரீதியான சவால்கள் இன்னும் நிலுவையில் உள்ளன; இது குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, செப்டெம்பர் மாதம் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தபோதும், இலங்கை நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதேபோன்றதொரு உறுதியை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை