களுத்துறையில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி!!
களுத்துறையில் இன்று(09) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை - நாகொடப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், உயிரிழந்த உணவக உரிமையாளரின் மனைவியும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை