பிக்குகளால் கிழித்தெறியப்பட்டது நீதிமன்ற உத்தரவு!!

 



ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


குறித்த நபர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துறவிகளிடம், பொலிஸார் நீதிமன்ற உத்தரவை வாசித்துக் காட்டி ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அறிக்கையில் பெயர் உள்ள 54 பேரையும் அங்கிருந்து செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

அங்குள்ள சில கூடாரத்தை பொலிஸார் அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து நீதிமன்ற அறிக்கையை பிக்குகள் சுருட்டி வீசியுள்ளனர்.

மகாசங்கத்தின் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பின் காலி வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.